அநேகரை வியக்க வைத்த மோடியின் சமூக வலைத்தள பதிவு ‘என் நண்பர் அனுரவுடன் அனுராதபுரத்தில்..’

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அனுராதபுரத்திற்கு விஜயம் செய்தார்.
அவரது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாள் திட்டத்தின்படி இது அமைந்துள்ளது.
விமான மூலம் அனுராதபுரத்திற்கு சென்ற அவரை அனுராதபுரத்தில் இராணுவ மரியாதையுடன் வரவேற்றனர்.
அதன் பின்னர் பிரதமர் மோடி , ஜனாதிபதி அனுர திசாநாயக்கவுடன் , ஜெய ஸ்ரீ மகா போதியை தரிசிக்கச் செல்லும் போது தனது சமூக வலைத்தள கணக்கில் புகைப்படமொன்றை சிங்களத்தில் பதிவிட்டு ,
“எனது நண்பன் ஜனாதிபதி அனுர திசாநாயக்கவுடன் , அனுராதபுரத்தில் ….” என பகிர்ந்திருந்தார்.