‘ETCA’ எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் உடனடியாக கையெழுத்திட வேண்டிய தருணம் இது.

அமெரிக்காவின் புதிய வரிகள் காரணமாக அந்நாட்டு சந்தை இனி இலங்கைக்கு திறந்திருக்காது. எனவே, தற்போதைய பொருளாதார நிலைக்கு தீர்வாக இந்தியாவுடன் ‘ETCA’ எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
தான் ஜனாதிபதியாக இருந்தபோது 2025 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட எண்ணியிருந்ததாகவும், தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த ஆண்டே கையெழுத்திடுவது அவசியம் என்றும் அவர் இந்திய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை நம்பியிருந்த இலங்கை , இனி புதிய வர்த்தக சந்தைகளை நோக்கி நகர வேண்டியது அவசியம் என்றும், ஆடை ஏற்றுமதி மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.