தாயை முதியோர் இல்லத்தில் விட மறுத்த கணவனை சரமாரியாக தாக்கிய பெண்வீட்டார்

தாயை முதியோர் இல்லத்தில் விட மறுத்த கணவனை பெண்வீட்டார் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மத்திய பிரதேசம், குவாலியரை சேர்ந்தவர் விஷால் பத்ரா. கார் உதிரிப் பாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது தாயை(70) முதியோர் இல்லத்திற்கு அனுப்பக் கூறி, விஷாலின் மனைவி நீலிகா வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு விஷால் மறுத்ததால், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் நீலிகாவின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் வந்து விஷாலை அடித்து தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த தாய் சரளாவின் தலை முடியை பிடித்து இழுத்துப் போட்டு ஆக்ரோஷமாக அடித்துள்ளனர். தடுக்க வந்த அக்கம்பக்கத்தினரையும் அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரத்திற்குப் பின் அக்கம் பக்கத்தினர் குடும்பச் சண்டையை விலக்கியுள்ளனர். இதனையடுத்து விஷால், தனது தாயாருடன் சென்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.