கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை!

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

மனு எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மனுக்கள் மீதான எதிர்ப்புகளை மே மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்ய முடியும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.