இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன செய்தியாளர் ஒருவர் பலி!

தெற்கு காஸாவில் உள்ளூர் செய்தியாளர்கள் பயன்படுத்திய கூடாரம் இஸ்ரேலிய ஆகாயப் படைத் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் கூடாரத்தில் மூண்ட தீயை மக்கள் அணைக்க முயன்றது காணொளியில் காணப்பட்டது. அந்தக் கூடாரம், திங்கட்கிழமை காலை கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனை வளாகத்தில் இருந்தது.
அந்தக் காணொளியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சரிபார்த்தது. செய்தியாளர் ஒருவர் தீப்பிடித்து எரிந்தது போலவும் வேறொருவர் அவரைக் காப்பாற்ற முயன்றது போலும் காட்டும் படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டன.
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையில் 210க்கும் அதிகமான செய்தியாளர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்.