மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பைய அணியை ஆர்சிபி வீழ்த்தி இருக்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதை அடுத்து களமிறங்கிய ஆர் சி பி அணியில் தொடக்கத்தில் சால்ட் 4 ரன்கள் ஆட்டம் இழக்க, தேவுதட் படிக்கல் 37 ரன்களும், விராட் கோலி42 பந்துகளில் 67 ரன்களும் எடுத்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிமின்ஸ்டன் டக்அவுட் ஆக கேப்டன் ரஜத் பட்டிதார் தனி ஆளாக போராடி 32 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரி, நான்கு சிக்சர் அடங்கும். இறுதியில் ஜித்தேஷ் சர்மா 19 பந்துகளின் 40 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்ஸரும், இரண்டு பவுண்டரியும் அடங்கும். இதன் மூலம் ஆர் சி பி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. இம்பேக்ட் வீரராக விளையாடிய ரோகித் சர்மா 9 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதேபோன்று ரியன் ரிக்கல்டன் 10 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க வில் ஜாக்ஸ் 18 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். இந்த சூழலில் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 5 பவுண்டரிகளை அடித்தாலும் அவரால் 26 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 99 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தோல்வியை கண்டிப்பாக தழுவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடுவரிசையில் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை தனி ஆளாக மாற்றினார். ஆர்சிபி வீசிய பந்தை எல்லாம் பவுண்டரி சிக்ஸர் என விரட்டினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
மறுபுறம் திலக் வர்மாவும் தன்னுடைய அதிரடியை காட்ட நான்கு சிக்ஸர் என விளாசினார். இதனால் அவர் 29 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி ஆட்டத்தை தனியாக முடித்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹேசல்வுட் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதனால் கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆர்சிபி அணியில் குர்னல் பாண்டியா அபாரமாக பந்துவீசி முதல் இரண்டு பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் மும்பை அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. கடைசி ஓவரில் மட்டும் குர்னல் பாண்டியா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய குர்னல் பாண்டியா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். யாஷ் தயால்,ஹேசல்வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.