வியாழேந்திரனுக்கு கிடைத்தது பிணை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் பெறுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு, கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர் மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன என்று
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு இன்று நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
இதனையடுத்தே வியாழேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிவான், குறித்த சந்தேகநபரை 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 5 சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
இதேநேரம் சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
…………