மூடப்பட்டது பாராளுமன்றம்!
கொரோனா பரவல் அச்சம் காரணமாக பாராளுமன்றத்தை இரண்டு நாட்கள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் நாளையும் பாராளுமன்றம் மூடப்படுகிறது. அதனால் பாராளுமன்ற ஊழியர்கள் இந்த இரண்டு நாட்களும் கடமைக்கு சமூகமளிக்கத் தேவையில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு நாட்களும் பாராளுமன்றத்தை கிருமிநாசினி தௌித்து சுத்தப்படுத்த உள்ளதாக அவர் கூறினார். அதன் பின் பாராளுமன்றம் திறக்கப்படும்.
பாராளுமன்ற பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்ட விசேட அதிரடிப்படை உறுப்பினர் தங்கியுள்ள முகாமில் கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனால் பாராளுமன்ற பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அனைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் அகற்றப்பட்டு புதிய உறுப்பினர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.