மன ஆறுதலுக்காக 7 புலிகளை வளர்த்தவர் கைது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே உள்ள பகுதியில் ஆடவர் ஒருவர் தமது மன ஆறுதலுக்காக 7 புலிகளை வளர்த்ததை அறிந்த , அதிகாரிகள் புலிகளை மீட்டு ஆடவரைக் கைது செய்தனர்.

கார்ல் மிட்சல் என்னும் 71 வயது முதியவர் ஏப்ரல் 2ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மிட்சலின் வீட்டில் புலிகள் வளர்க்கப்படுவதை அறிந்த அதிகாரிகள் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது புலிகள் அடைக்கப்பட்ட கூண்டுகளின் சாவியை அதிகாரிகள் கேட்டபோது அதை மிட்சல் கொடுக்க மறுத்துவிட்டார்.

அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். புலிகள் தொடர்பான ஆவணங்களும் மிட்சலிடம் இல்லை. ஆடவர் அன்றே பிணையில் வெளியே வந்தார்.

மிட்சல் தனது மன ஆறுதலுக்காகப் புலிகளை வளர்த்ததாக விசாரணையில் தெரிவித்தார். அவர் புலிகளை எப்படி வாங்கினார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிட்சல் வீட்டில் இருந்த ஏழு புலிகளும் பாதுகாப்பாக விலங்கு நலக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.