காங்கிரஸ் கட்சியின் முது பெரும் தலைவராக இருந்த குமரி அனந்தன் காலமானார்!

காமராஜருக்கு நெருக்கமானவராகவும், அப்பழுக்கற்ற அரசியல்வாதியாகவும், காங்கிரஸ் கட்சியின் முது பெரும் தலைவராகவும் இருந்த குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 93.
சென்னை விருகம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி முதல் சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவருடைய உயிர் பிரிந்தது.
குமரி அனந்தனின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
|