கொழும்பு வரும் அனைத்து பஸ் போக்குவரத்துகளும் இடை நிறுத்தம் !

கொழும்பிற்கு வரும் அரச மற்றும் தனியார் அனைத்து தூர இட பஸ்களையும் மீண்டும் அறிவிக்கும் வரையில் இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொவிட் – 19 வைரஸ் பரவலை அடுத்து கொழும்பு பொலிஸ் எல்லை பகுதிக்குள் மேலும் சில இடங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.