பாசமாக வளர்த்த பசுவிற்கு வளைகாப்பு நடத்தி 500 பேருக்கு விருந்து அளித்த தொழிலதிபர்!

பாசமாக வளர்த்த பசுவிற்கு வளைகாப்பு நடத்தி தொழிலதிபர் ஒருவர் 500 பேருக்கு விருந்து அளித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்திய மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தான் பாசமாக வளர்த்த பசுவிற்கு வளைகாப்பு நடத்தி 500 பேருக்கு விருந்து அளித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள ஹாசனில் வசிக்கும் தொழிலதிபர் தினேஷ். இவர் தனது வீட்டில் வளர்ப்பு பிராணிகளாக பசு மற்றும் காளைகளை வளர்த்து வருகிறார். அவை மீது இவர் மிகுந்த பாசத்தை வைத்துள்ளார்.
அந்தவகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரின் பிடதி அருகில் உள்ள கிராமத்தில் இருந்து, ஹள்ளிகார் இனத்தைச் சேர்ந்த நான்கு மாத பெண் கன்றுக்குட்டியை வாங்கி வளர்த்து வந்தார். அதற்கு ‘கவுரி’ என்று பெயரிட்டார்.
இந்நிலையில், இந்த கவுரி பசுவானது கர்ப்பமாக இருப்பதால் அதற்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்று நினைத்தார். பின்னர், சென்னராயபட்டணாவில் உள்ள திருமண மண்டபத்தில், பசுவிற்கு இந்து சம்பிரதாயப்படி வளைகாப்பு நடத்தப்பட்டது.
பசுவிற்கு மாலைகள் அணுவித்தனர். மேலும், வெற்றிலை, பச்சை வளையல்கள், அட்சதை, தேங்காய், பழங்கள் வைத்து ஆரத்தி எடுத்தனர் .
அதுமட்டுமல்லாமல் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 500 பேருக்கு பிரம்மாண்ட விருந்து வழங்கப்பட்டது.
இதுகுறித்து தொழிலதிபர் கூறுகையில், “ஹள்ளிகார் இன பசுக்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. இதனை காப்பாற்றி பாதுகாப்பது நம் கடமை. இதனால் தான் பசுவுக்கு வளைகாப்பு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்” என்றார்.