மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற திருமணத்தில் விருந்தாளிகளை ஆச்சரியப்பட வைத்த உணவு மெனு!

திருமணத்திற்கு வழங்கப்படும் உணவு மெனுவில் கலோரியின் எண்ணிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

பொதுவாகவே பலரும் தங்களது திருமணங்களை ஆடைகள் முதல் உணவு வரை தனித்துவமான முறையில் நடத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.

திருமணத்திற்கு சென்றாலே அங்கு சைவ உணவா அல்லது அசைவ உணவா என்பது குறித்த எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், திருமணத்தில் பரிமாறப்படும் உணவின் கலோரிகள் குறித்து நாம் யோசிப்பதே இல்லை.

ஆனால், இங்கு ஒரு திருமண மெனுவில் கலோரி குறித்த விவரங்களை வழங்கியுள்ளனர். இது விருந்தாளிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற திருமணத்தில் தான் இந்த மெனு வழங்கப்பட்டுள்ளது. இது விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மெனுவில், “உங்களை சௌகரியமாக வைத்துக் கொண்டு உணவை வீணாக்காமல் அனுபவியுங்கள்” என்று குறிப்பிட்டு உணவுகளின் கலோரிகள் குறித்த விவரங்களை கூறியுள்ளனர்.

இதில் தண்ணீர் 0% kcal, சாலட் 10 % kcal என மொத்த உணவும் 1200 கிலோ கலோரிகள் இருப்பதாக கூறியுள்ளனர். விருந்தினர்கள் இதனை பயன்படுத்தி எவ்வளவு நடனம் ஆட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருந்தது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.