இந்தியா இப்போது மாறிவிட்டது.. நாம் இப்போது நண்பர்கள்… – டில்வின் தெரிவிப்பு.

தற்போதைய அரசாங்கம் இந்தியாவிற்கு நாட்டை காட்டிக் கொடுத்துவிட்டதாகக் கூறுபவர்கள் யாராக இருந்தாலும் அதை நிரூபித்துக் காட்டும்படி தான் சவால் விடுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அனுர குமார திசாநாயக்க இந்தியா சென்று இரு நாடுகளுக்கும் சாதகமான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும், அங்கு அவர் விடுத்த அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் இங்கு வந்து மேலும் இரு நாடுகளுக்கும் சாதகமான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார்.

“இலங்கையை இந்தியாவுக்கு மொத்தமாக கொடுக்க இருந்தார்கள். அதை மாற்றியது நாங்கள்தான்” என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னர் மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுக்கு எதிராக போராடியிருந்தாலும், இப்போது இந்தியா மாறிவிட்டதால் இன்னும் கோபமாக இருக்க வேண்டியதில்லை என்று கூறிய அவர், “ஒரு பிரச்சனை வந்தது. நாங்கள் போராடினோம். இப்போது அது முடிந்துவிட்டது. இப்போது நாம் நட்பாக இருக்க வேண்டும். அதுதான் அரசியல்” என்றும் கூறினார்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.