கோட்டாபயவின் வீடு தொடர்பில் ஒருவர் கைது!

கதிர்காம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசேக விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணிக்க கங்கைக்கு அருகில் உள்ள கட்டுமானமொன்றிற்கு முறையற்ற அனுமதியளித்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கட்டுமானம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.