ஏறாவூர்பற்று பிரதேசத்துக்கான தமிழரசின் பொதுக்கூட்டமும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக்கூட்டமும் வேட்பாளர் அறிமுகக் கூட்டமும் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வுகள் இம்முறை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச சபை பிரிவிலும் தனித்தனியாக நடத்தப்பட்டு வரும் நிலையில் ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக் கூட்டமும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் நாளை பிற்பகல் 3 மணியளவில் செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
நீண்ட காலத்துக்குப் பிறகு செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று தொகுதிக் கிளை அழைப்பு விடுத்துள்ளது.