இந்தியாவுடனான உடன்படிக்கைகள்: பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மனோ கணேசன் கோரிக்கை .

பிரதமர் மோடியுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று விவாதம் நடைபெற்றது. அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றிய பின்னர் எழுந்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார். “இந்தியாவுடன் செய்து கொண்டவை தீர்க்கமான ஒப்பந்தங்கள் அல்ல, புரிந்துணர்வு உடன்படிக்கைகள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியானால் அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, முழு நாட்டினதும் நம்பிக்கையை பெறுங்கள்” என்று மனோ கணேசன் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹேரத், கடந்த காலத்தில் இந்தியாவுடன் உடன்படிக்கை செய்ய முயன்றபோது, தற்போது கேள்வி எழுப்பும் தரப்பினர்தான் நாட்டை காட்டிக் கொடுப்பதாக குற்றம் சாட்டியதாக பதிலளித்தார்.

இதற்கு பதிலளித்த மனோ கணேசன், “நீங்கள் இந்தியாவுடன் உடன்படிக்கை செய்ததன் மூலம் நாட்டை காட்டிக் கொடுப்பதாக எதிர்க்கட்சியில் சிலர் கூறுவதாக இப்போது சொன்னீர்கள். “நான் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை. உண்மையில், நீங்கள் இன்று செய்துள்ள உடன்பாடுகளை கடந்த காலத்தில், நாங்கள் செய்ய முயன்ற போது நீங்கள்தான் நாங்கள் நாட்டை காட்டி கொடுத்து விட்டதாக சொன்னீர்கள்.” ” என்று கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்தினார்.

விவாதத்தின் முடிவில், அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் எழுந்து, இந்தியாவுடனான ஒப்பந்தங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்து இன்னும் சில தினங்களில் பதிலளிப்பதாக மனோ கணேசனுக்கு உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.