யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: அமைச்சர் குழு இன்று நேரில் ஆராய்வு!

யாழ்ப்பாணம், மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட குழுவினர் கள விஜயமொன்றை இன்று மேற்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான சனத் ஜயசூரியவும் இந்த விஜயத்தில் பங்கேற்றார்.

மண்டைதீவுக்கு விஜயம் செய்த குழுவினர் மைதானம் அமைப்பது தொடர்பான நிலைமைகளை ஆராய்ந்தனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், விளையாட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகள், பிரதேச செயலாளர், இராணுவத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.