அச்சுவேலி கூட்டுறவுச் சங்கக் காணியும் விடுவிப்பு.

யாழ்ப்பாணம், அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடம் மற்றும் அதனைச் சூழவிருந்த சுமார் 8 பரப்புக் காணி இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி மற்றும் அதனுள் இருந்த கட்டடம் என்பவற்றை வலிகாமம் கிழக்கு பிரதேச செயலரிடம் இராணுவத்தினர் இன்று உத்தியோகபூர்வமாகக் கையளித்த நிலையில், பிரதேச செயலரால் அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பொது முகாமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
இதுவரை காலமும் மாற்றிடம் ஒன்றில் தலைமைக் காரியாலயம் இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.