அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க அனுர செல்கிறார்..

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு பேச்சுவார்த்தை நடத்த ஒரு வாய்ப்பைப் பெறுவதற்கான கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது.
அமெரிக்க வரிகள் தொடர்பாக இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் அந்நாட்டு பிரதிநிதிகளுக்கு இடையே கடந்த எட்டாம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இரு ஜனாதிபதிகளுக்கும் இடையே உடனடி சந்திப்பு தேவை என்று அமெரிக்க தரப்பில் இருந்து இலங்கை பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.
அதன்படி, அமெரிக்க அதிகாரிகள் அதற்கு சாதகமான பதிலை அளித்துள்ளனர்.
தற்போது அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட புதிய வரி கொள்கை தொண்ணூறு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அந்த காலத்திற்குள் உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் வரி விகிதங்களை மாற்ற அமெரிக்கா நினைக்கிறது.