அமெரிக்க வரி சவாலை எதிர் கொள்ள சர்வ கட்சி குழு அமைக்க ஜனாதிபதி உறுதி -மனோ கணேசன்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 44% வரி விதிக்க பட்டு, தற்போது இடை நிறுத்த பட்ட இந்த 90 நாள் இடைக்கால அவகாசத்தில், நிலைமை கண்காணத்து உரிய ஆலோசனைகளை முன்வைக்க, ஆளும் கட்சி, எதிர் கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை குழு அமைக்க படும். இந்த முடிவு இன்றைய சர்வகட்சி மாநாட்டின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்தார்.
இந்த தகவலை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.