“அன்று பெரகல முகாமின் சாக்கு பூச்சாண்டியான தலையாட்டி இன்று அமைச்சர்..” – சாமர சம்பத்.

88/89 காலப்பகுதியில் பெரகல (Beragala) இராணுவ முகாமில் சாக்கு பூச்சாண்டியாக செயற்பட்ட நபர் இன்று அரசாங்கத்தின் அமைச்சராக செயற்படுகிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
அந்த நபர் இன்று அரசாங்கத்தின் முன்னிலை அமைச்சராக இருப்பதாகக் கூறிய அவர், தான் அவரது பெயரை குறிப்பிடப் போவதில்லை என்றும், அது சமூக வலைத்தளங்களில் வெளியாகும் என்றும் கூறினார்.
இன்று நாடாளுமன்றத்தில் பட்டலந்த (Batalanda) ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.