மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற நிலையில் மதியம் பிரதமர் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பிரதமர் ஆலயத்துக்கு வருகை தர விருந்த நிலையில் அதிகாலை வேளை ஆலயச் சூழலில், பொலிஸ் விசேட அதிரடி படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்புப் பிரிவினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டது.

ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்த நிலையில் பலரும் விசனம் தெரிவித்திருந்தனர்.

இதன் பின்னர் சிறிது நேரத்தில் ஆலய தர்மகார்த்த சபையினர் முக்கியஸ்தர்களுடன் பேசியதை அடுத்து, பாதுகாப்புப் கெடுபிடிகள் ஓரளவு தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.