தமிழ்நாட்டிலிருந்து கொழும்புக்கு நேரடி ரயில் பாதை ஆரம்பம்..- இந்தியா டுடே

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 6ஆம் திகதி திறந்து வைத்த புதிய பாம்பன் பாலம், இந்தியாவின் சென்னை நகரிலிருந்து கொழும்புக்கு நேரடி ரயில் சேவையை இயக்குவதற்கான ஒரு முக்கியமான பகுதியை நிறைவு செய்வதாக ‘இந்தியா டுடே’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தகைய ரயில் சேவை மூலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்படும் அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் வர்த்தகம் ஆகிய இரண்டும் மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி ரயில் அல்லது நெடுஞ்சாலை இணைப்புக்கு 25 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் மட்டுமே தேவைப்படுவதாகக் கூறும் இந்தியா டுடே, இது தொடர்பான பல வரலாற்று உண்மைகள் அடங்கிய விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.