திசைகாட்டி அலுவலகத்தை தாக்கிய ,மொட்டு வேட்பாளர்கள் கைது.

தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார அலுவலகம் ஒன்று தாக்கப்பட்டுள்ளது.
நிக்கவெரட்டிய பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவரின் அலுவலகமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் மற்றும் மற்றொரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு வேட்பாளர்களும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.