குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல்; தமிழிசை இல்லத்திற்குச் சென்ற அமித்ஷா

சென்னை வந்துள்ள அமித் ஷா, முன்னாள் தெலுங்கான ஆளுநர் தமிழிசையின் இல்லத்திற்குச் சென்று அவரது தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.
டெல்லியிலிருந்து வியாழன் (ஏப்ரல் 10) இரவு 10:20 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்னை வந்த அமித்ஷாவை மத்திய அமைச்சர் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
அன்று இரவு கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் அமித் ஷா தங்கினார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) குமரி அனந்தன் மறைவிற்கு அவரது மகள் தமிழிசையை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அமித் ஷா ஆறுதல் கூறினார். அப்போது அமித் ஷாவுடன் அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் இருந்தனர்.
இதற்கிடையே தமக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் தமிழிசை நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மற்றொரு நிலவரத்தில் அடுத்த கட்டமாகத் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தவுள்ளார்.
மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்குச் சென்ற அவர், அரசியல் கட்சித் தலைவர்களையும் அங்கு சந்தித்துப் பேசினார்.
தமிழக பாஜக தலைவர் தோ்வு, 2026 பேரவைத் தோ்தல் கூட்டணி வியூகம் ஆகியவை குறித்து பாஜக மூத்த தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தவுள்ளாா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போதுள்ள தலைவா்கள் சிலரை நேரில் அழைத்துப் பேச அவர் முடிவு செய்துள்ளாா். ஜி.கே. வாசனையும் அவர் சந்திப்பார் எனத் தெரிகிறது.