அன்னிய நாட்டு மரங்கள் அகற்றத்தில் தமிழகம் முன்னிலையில் – தைல மரங்களை அகற்ற கோரிய வழக்கில் நீதிமன்ற பாராட்டு!

சென்னை, புதுக்கோட்டை: அன்னிய நாட்டு மரங்களின் அழிவுத்தன்மையை உணர்ந்து அவற்றை அகற்றும் நடவடிக்கையில் தமிழகம் தற்போது முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள தைல மரங்கள் மற்றும் கருவை மரங்களை அகற்ற கோரி, சரவணன் என்ற சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அரசு வெளியீட்டில், 25 வகையான அன்னிய நாட்டு மரங்கள் பட்டியலிடப்பட்டு, அவை அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதுக்கோட்டை மாவட்டத்தில், விவசாய சங்கங்களும், தனிநபர்களும் தொடர்ந்த வழக்கில், வனத்தோட்டக் கழகம் நீதிமன்றத்தில் தைலமரங்கள் நல்லவை என்றும், புதிய மரக்கன்று நடவு தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் கூறுவது:

“தைலமரங்களால் மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது, மழை குறைந்து விட்டது. வனவிலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, சமவெளிப் பகுதிகளிலும் இம்மரங்களை அகற்ற வேண்டும்.”

இதை தொடர்ந்து, தமிழக அரசு முழுமையாக நடவடிக்கை எடுக்க, மாண்புமிகு நீதியரசர்கள் தாங்களாக முன்வந்து தெளிவான உத்தரவுகளை வழங்க வேண்டும் என்றும், தங்க கண்ணன் – புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக செய்தியாளர் : நீலகண்டன்

Leave A Reply

Your email address will not be published.