டெய்ஸி பாட்டிக்கு சொத்துக்கள் இல்லை.. ராஜபக்ஷ குடும்பத்தை நம்பி வாழ்பவர்.. கணக்கில் 59 மில்லியன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்ஸி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட 59 மில்லியன் ரூபா பணத்தை வெளிப்படுத்த முடியாத கூட்டு கணக்கை வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டெய்ஸி ஃபாரஸ்ட் சொத்துக்கள் உள்ள பெண்மணி அல்ல என்றும், அவர் ராஜபக்ஷ குடும்பத்தின் வருமானத்தை நம்பி வாழ்பவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.