புத்தாண்டு அன்பளிப்புகள் , விருந்துகள் போலீசாருக்கு தேவையில்லை – பொலிஸ் தலைவரின் உத்தரவு.

புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் அதிகாரிகள் , வணிக சமூகத்திடமிருந்து நிதி நன்கொடைகள் பெற்று பொலிஸ் நிலையங்களுக்குள் விருந்து உபசரிப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று பதில் பொலிஸ் தலைவர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது பரிசுகள் வழங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகளும் , வழங்கப்படும் எந்த பணத்தையோ அல்லது பரிசையோ ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் பதில் பொலிஸ் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அறிவுறுத்தல்களை மீறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.