போனஸ் குறைப்பு.. ஸ்ரீலங்கன் விமான ஊழியர்கள் விமானங்களுக்குள் போராட்டம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
தங்களது உணவுப் போனசை மீண்டும் ஒதுக்குவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகத்திடம் செய்யப்பட்ட பல புகார்களுக்குப் பின்னர் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விமானத்திற்குள் உணவுப் படி, வருடாந்திர நிலையான சம்பள உயர்வு, வருகை ஊக்கத்தொகை செலுத்துதல், தவணைப் படி உயர்வு, விதிமுறைகளுக்கு இணங்க நகர மையத்தில் அமைந்துள்ள ஹோட்டல் தங்குமிடம் உள்ளிட்ட சில கோரிக்கைகளும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் அடங்கும்.