இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் மறைக்கப்பட்டுள்ளது.. யாரும் பார்த்ததுமில்லை.. பார்க்கவும் அனுமதியும் இல்லை.

தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் செய்துள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை முடியுமானால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சவால் விடுவதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலீத் ஜயவீர தெரிவித்தார்.
அவிசாவளை பகுதியில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“அரசாங்கம் கடந்த நாட்களில் மோடியுடன் 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தங்கள் குறித்து விஜித்த ஹேரத் நாடாளுமன்றத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால் ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் குறித்து எதுவும் கூறவில்லை. வேண்டுமானால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரிக்கை வைக்கலாம் என்று கூறுகிறார்கள். இது எங்கே கூறப்படுகிறது என்றால் நாடாளுமன்றத்தில். இப்போது அரசாங்கம் இந்த நிலைக்கு வந்துள்ளது. மிகவும் வருத்தமாக உள்ளது. எந்த அரசாங்கமும் இப்படி செய்ததில்லை.
ஏதேனும் ராஜதந்திர காரணங்களுக்காக இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை வெளியிட முடியாவிட்டால், முதுகெலும்புடன் அரசாங்கம் , ஆம் நாங்கள் கையெழுத்திட்டோம், அது என்ன காரணத்திற்காக என பின்னர் வெளியிடப்படும் என்று சொல்ல முடியும். இந்த ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் யாருக்கும் தெரியாது. தெரிந்துகொள்ளவும் அனுமதி இல்லை” என்றார் திலீத் ஜயவீர .