கேட்டது இருபதாயிரம், அதிகரித்தது எட்டாயிரம், ஒன்பதாயிரம் – ஆசிரியர் சம்பளம் குறித்து ஸ்டாலின் கோபாவேசம்!

ஆசிரியர்களுக்காக கோரப்பட்ட சம்பள உயர்வு இருபதாயிரம் ரூபாய்கள் என்றும், ஆனால், இந்த முறை சம்பளம் ஐயாயிரத்தில் இருந்து பத்தொன்பதாயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் , பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பாலான ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரித்திருப்பது எட்டாயிரம் முதல் ஒன்பதாயிரம் ரூபாய் வரை மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அதன்படி, இந்த முறை வழங்கப்பட்ட சம்பள உயர்வு அவர்கள் கோரிய சம்பள உயர்வு அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.