சன்ரைசர்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ஐதராபாத் மைதானத்தில் இன்று (12) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் சன்ரைசஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ஓட்டங்களையும், பிரப்ஸிம்ரன் சிங் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுக்களையும் எஷான் மலிங்க இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 246 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய சன்ரைசஸ் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் துடுப்பாட்டத்தில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய அபிஷேக் சர்மா 141 ஓட்டங்களையும், ட்ரெவிஸ் ஹெட் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் யுவேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்