இனி கொரோனா நோயாளிகளுக்கு இடைத் தங்கல் தனிமைப்படுத்தல் இல்லை
இனி கொரோனா நோயாளிகளுக்கு இடைத் தங்கல் தனிமைப்படுத்தல் இல்லை எனவும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவர் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
WATCH : "Home Qurantine" No qurantine centers for 1st contacts of Covid patients from today https://t.co/1QuTjp8ysu
— Azzam Ameen (@AzzamAmeen) October 26, 2020
கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய முதல் தொடர்பாளர்கள் இன்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் 7,872 பேரில் 3,923 பேர் நாடு பூராகவும் உள்ள 32 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதற்கு மேலாக கொரோனா அறிகுறிகளுடன் 527 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.