நாடு வீழ்ச்சியடைந்த நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்க ரணில் தவிர வேறு யாரும் இலங்கையில் இருக்கவில்லை.. அவர் பொறுப்பேற்று அதைச் செய்தார்.. – லால் காந்த புகழாரம்!

பொருளாதாரம் உடைந்து நொறுங்கிய அந்த நேரத்தில், நாட்டைப் பொறுப்பேற்க ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு யாரும் இலங்கையில் இருக்கவில்லை என அமைச்சர் கே.டி. லால் காந்த தெரவித்துள்ளார்.
‘ரணில் இந்த சிஸ்டத்திற்குள் ஒரு நிர்வாகத்தை செய்தார். அது உண்மை.
அந்த நேரத்தில் இலங்கையில் அவருக்குப் பதிலாக வேறு எவரும் இருக்கவில்லை.
நடைமுறை பொருளாதார செயல்முறையுடன் பின்னிப்பிணைந்திருந்த ஒருவர், அதிலிருந்தே பிறந்தவர் போல அதற்கு சரியாக பொருந்திப்போனவர் ரணில்.
J.R ஜெயவர்தனவுக்குப் பிறகு, அந்த சிஸ்டத்தில் இருந்து உருவான மிக முக்கியமான நபர் ரணில். அவர் இங்கே வந்த பிறகு ஜனாதிபதியாக சில நிர்வாக மாற்றங்களை செய்தார்.’ என JVPயின் லால் காந்த தெரிவித்துள்ளார்.