ரணிலிடம் CID விசாரணை எதற்காக?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வெலிகம W15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கொழும்பு குற்றப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து , 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது தொடர்பில்தான் இந்த விசாரணை.
2023 டிசம்பர் 31ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனும் சந்தேக நபராக பெயரிடப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.