சிறீதரன் எம்பி மீது சேறுபூசும் கீழ்த்தர வேலையாக பொய்ச்செய்தி பரப்பல்!

குறித்த நபர் சிறீதரன் எம்பி சம்பந்தப்பட்ட எந்த இடத்தில் இருந்தும் கைது செய்யப்படவில்லை பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். சந்தேகம் இருந்தால் கிளிநொச்சி பொலீசில் நேரடியாக தொடர்புகொண்டு அறிந்து உறுதிப்படுத்தலாம்.
ஊடக தகவல்களின்படி குறித்த நபர் பாரதிபுரம் பகுதியில் இருந்து தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அத்தோடு குறித்த நபர் தமிழரசுக்கட்சின் எந்தவித கட்சி பொறுப்புக்களு வகித்தவரும் இல்லை. முழங்காவில் அமைப்பாளராக செயற்பட்டவரும் இல்லை. தமிழரசுக்கட்சியின் முழங்காவில் அமைப்பாளராக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஶ்ரீரஞ்சன் அவர்களே செயற்படுகிறார்.
தற்போது தேர்தல் காலம் என்பதால் அரசியல் இயலாமையில் EPDP சந்திரகுமார் கட்சியை சேர்ந்த நபர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் வண்டில் சின்னத்தில் தேர்தல் கேட்கும் சிறீதரன் எம்பிக்கு எதிராக தரப்புக்களும் இணைந்தே இந்த கேவலமான பொய்க்கதைகளை பரப்பி வருகிறார்கள்.
அறத்துடன் அரசியலை எதிர்கொள்ள தைரியமற்ற கேவலமான மனிதர்கள் சிலரே சிறீதரன் எம்பியின் பெயரிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் இப்படியான பொய்த்தகவலை வெளியிட்டு பரப்ப வருகிறார்கள்.
குறித்த துஷ்பிரயோக சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட நபரின் எந்த விடயத்திலும் சிறீதரன் எம்பி தலையிட்டடிருக்கவில்லை. தேர்தல் காலம் என்பதால் சிறீதரன் எம்பியின் அரசியலை பலிவீனப்படுத்தும் நோக்கில் இப்படியான கட்டுக்கதைகளை கீழ்த்தரமாக பரப்பிவருகிறார்கள்.
சிறீதரன் எம்பி குறித்த விடயத்தில் எதாவது சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சொல்பவர்கள் யாராவது, ஆதாரத்தோடு சிறீதரன் எம்பி சம்பந்தப்பட்ட விடயத்தை பகிருங்கள்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு பலர் அறிமுகமாக இருப்பார்கள். அவர்கள் அனைவரும் என்ன செய்கிறார்கள் என்று தொடர்ந்து கவணித்துக்கொண்டு இருக்க முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே. குற்றம் செய்தவர்களுக்கு பாரபட்சம் பார்க்கத்தேவையில்லை. குறித்த விடயம் தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்குமாறு எழுத்துமூலம் சிறுவர் நன்னடத்தை பிரிவிடமும், மாகாண ஆளுனரிடமும் சிறீதரன் எம்பி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சட்டம் தன் கடமையை செய்து சிறந்த தண்டனை வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.
நேர்மையாக அரசியல் செய்து வெல்ல முடியாத இயலாமையில் இப்படி கீழ்த்தரமான பொய்களை பரப்பி கேவலமான அரசியலை செய்யாதீர்கள்.