நாங்கள் வெல்லும் சபைகளுக்கு கண்மூடித்தனமாக நிதி; மற்றவர்களுக்கு பரிசீலனை! – ஜனாதிபதி அனுர குமார தெரிவிப்பு!

வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் சபைகளுக்கு கண்மூடித்தனமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் புதிய வரவு செலவுத் திட்டம் கொண்டுவரப்படவுள்ள நிலையில், NPP ஆளும் சபைகளின் அபிவிருத்தி திட்டங்களுக்கு உடனடியாக நிதி வழங்கப்படும்.
ஆனால், மற்ற கட்சிகள் வெல்லும் சபைகளின் திட்டங்கள் பலமுறை பரிசீலிக்கப்படும். முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல் காரணமாகவே இந்த வேறுபாடு காட்டப்படுவதாகவும், திறம்பட செயல்பட NPPக்கு அனைத்து சபைகளின் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கந்தளாய் நகரில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் வலியுறுத்தினார்.