அமெரிக்க வரியால் இலங்கைக்கு பெரிய பாதிப்பில்லை..

அமெரிக்காவின் உலகளாவிய வரி விதிப்பு இலங்கைக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறியுள்ளார்.
இலங்கையின் அமெரிக்க ஏற்றுமதியில் ஆடைத் துறையே அதிகம். ஒருவேளை வரி காரணமாக ஆடைத் தொழிலில் வேலை இழப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு மாற்று வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
சீனாவின் வர்த்தகப் போரில் அமெரிக்கா வெற்றி பெற முடியாது என்றும், இந்த வரி விதிப்பு அமெரிக்காவிற்கும் நீண்ட காலத்திற்குப் பாதகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தனது தவறான முடிவை விரைவில் திரும்பப் பெறுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.