பொது பாதுகாப்பு அமைச்சைப் பொறுப்பேற்க நான் தயார்.. – பொன்சேகா

தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால், அதை பொறுப்பேற்க தான் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார்.
இணைய ஊடகமொன்றின் கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர் குறிப்பிடுகையில், அத்தகைய பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்தால் அதை ஏற்க விருப்பம் இல்லை என சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.
ஆனால், அனுர குமார ஜனாதிபதியாக இருக்கும் திசைகாட்டி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர தான் பங்களிக்காததால், அத்தகைய பொறுப்பை கேட்க தனக்கு உரிமை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.