“இந்தியா-இலங்கை ஒப்பந்தங்களை மறைக்கவில்லை!”- டில்வின்! “தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் விபரங்கள் மறைக்கப்பட்டதா?” – எதிர்க்கட்சிகள் சந்தேகம்!

இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் எதுவும் மறைக்கப்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிடுகிறார்.
அந்த ஒப்பந்தங்கள் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், யார் வேண்டுமானாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
இணைய ஊடகமொன்றின் கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தங்கள் எதுவும் இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கும்போது சில பகுதிகள் தேசிய பாதுகாப்பு அல்லது பொருளாதாரம் தொடர்பான முக்கியமான விஷயங்கள் என்று கூறி வழங்காமல் இருக்க வாய்ப்புள்ளதாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.