பிள்ளையானுடன் தொலைபேசியில் பேச அனுமதி கேட்ட ரணில்! அனுமதி மறுத்த அரசு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது 90 நாட்கள் காவலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரும், சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுடன் தொலைபேசி மூலம் உரையாட அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கோரிக்கை கடந்த 9ம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களம் வழியாக முன்வைக்கப்பட்டது.
எனினும், இது சட்டவிரோதமானது எனக் கூறி, மக்கள் பாதுகாப்பு அமைச்சு அந்த அனுமதியை மறுத்துவிட்டது.
அரசாங்க விதிகளின்படி, காவலில் உள்ள ஒருவருடன் தொலைபேசி வழியே தொடர்பு கொள்ள முடியாது என்பதே காரணமாகும்.