கந்தளாய் பஸ் லொறி விபத்து… ஒருவர் பலி… 26 பேர் மருத்துவமனையில்…

கண்டி – திருகோணமலை பிரதான வீதியில் அக்ரபோபுர பகுதியில் இன்று காலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்து 26 பேர் காயமடைந்ததாக அக்ரபோபுர பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பஸ்ஸின் சாரதி ஆவார்.
மாவனெல்லவில் இருந்து யாத்திரைக் குழுவை ஏற்றிக்கொண்டு திருகோணமலை நோக்கிச் சென்ற பஸ் ஒன்று, பாதுகாப்பற்ற முறையிலும் பொறுப்பற்ற விதத்திலும் முன்னால் சென்ற கார் ஒன்றை முந்த முயன்றபோது, பஸ் காரின் மீது மோதியுள்ளது.
அதன் பின்னர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த லொறியின் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து காயமடைந்தவர்களை கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடல் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.