ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பின்: இந்தியா – சீனா இடையே விமானச் சேவை பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நேரடி பயணிகள் விமானச் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இரு நாடுகளும் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. இருப்பினும், சேவை தொடங்கும் திகதி இன்னும் முடிவாகவில்லை என்று இந்தியா ஏப்ரல் 14ம் திகதி தெரிவித்துள்ளது.

எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதல்களால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இரு நாடுகளின் உறவு மோசமடைந்திருந்த நிலையில், வணிக மற்றும் பொருளாதார வேறுபாடுகளைக் களைந்து விமானப் போக்குவரத்தை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்திய பொது விமானப் போக்குவரத்துத் துறையின் செயலாளர் வும்லுன்மங் கூறுகையில், இரு நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும், இன்னும் சில பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பின்னர் பயணிகள் விமானச் சேவை நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் எல்லைப் படைகளை விலக்கிக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.