1,800 கோடி ரூபா போதைப்பொருளை கடலில் வீசி விட்டு , கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்!

இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், ரூ.1,800 கோடி மதிப்பிலான 300 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றினர். எனினும், கடத்தல்காரர்கள் படையினரைக் கண்டதும் போதைப்பொருளை அரபிக்கடலில் வீசிவிட்டு, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் நோக்கி தப்பிச் சென்றனர்.
கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 12-13 இரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கையில், கடலோர காவல்படை கப்பல் சந்தேகத்திற்குரிய படகை கண்டறிந்தது. தொடர்ந்து கடற்பகுதியில் தீவிர சோதனை நடத்தி போதைப்பொருளை மீட்டனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மெத்தம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படுகிறது