திருமலையில் யானை மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் மரணம்!

திருகோணமலை – ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் கன்னியா பகுதியில் யானை மீது மோதி மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரின் நண்பன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
வவுனியா, புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய முபாரக் நிப்றாஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் 22 வயதுடைய நண்பனான சயான் என்பவர் விபத்தில் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று யானை மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.