உக்ரைனின் பதிலடி: ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் ரஷ்ய மூதாட்டி பலி

ரஷ்யாவின் குர்ஸ்க் நகர் மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் 85 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
உக்ரேனிய எல்லைக்கு அருகே நடத்தப்பட்ட இந்த இரவுநேரத் தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடங்கள் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்தன.
தீப்பிடித்த வீடுகளிலிருந்து குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் நிறுத்துமிடமும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் ரஷ்யா நடத்திய கொடூரமான தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.