நாற்றுப் பண்ணையை பார்வையிட்ட ஆளுநர்.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிலுள்ள கிறீன் லேயர் அமைப்பின் நாற்றுப் பண்ணையை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகளை ஆளுநர் பார்வையிட்டதுடன், எதிர்காலத்தில் அந்த அமைப்பு முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் நிறுவனத்தினருடன் கலந்துரையாடினார்.
இதன்போது கோப்பாய் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீயும் இணைந்திருந்தார்.