இந்தியாவில் முதன்முறையாக ஓடும் ரயிலில் ஏ.டி.எம் மெஷின் அறிமுகம்!

இந்தியாவில் முதன்முறையாக ஓடும் ரயிலில் ஏ.டி.எம் மெஷினை மத்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

ஓடும் ரயிலில் ATM மெஷின்
இந்தியாவில் தற்போது ஓன்லைன் பண பரிவர்த்தனை அதிகமாகிவிட்டதால் நேரடியாக பணத்தை கொடுப்பதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்கையில் நாம் நேரடியாக ரொக்க பணத்தை கொடுக்க வேண்டும்.

இதனால் பணம் எடுப்பதில் ஏ.டி.எம் மெஷின்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது வரை இந்தியாவில் பல முக்கியமான இடங்கள், ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஏ.டி.எம் மெஷின்கள் காணப்படும்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் முதன்முறையாக ஓடும் ரயிலில் ஏடிஎம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து மன்மாட் வரை இயக்கப்படும் பஞ்ச்வாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் சேவையை மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயிலில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படாத இடத்தில் இந்த ஏ.டி.எம் மெஷின் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் உள்ள அனைத்து வகுப்புப் பயணிகளும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரயில்வேயுடன் மகாராஷ்டிரா பேங்க் இணைந்து இந்த சேவையை நிறுவி இருக்கிறது. இதில் கிடைக்கும் வரவேற்பை பார்த்து மற்ற ரயில்களிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.