இத்தாலியில் கேபள் கார் விழுந்ததில் 4 பேர் மரணம்.

இத்தாலியின் நேப்பல்ஸ் நகருக்கு அருகே மலைப்பகுதியில் கம்பிவண்டி ஒன்று விழுந்ததில் 4 பேர் மரணித்துள்ளனர்.

மேலும் ஒருவர் கடுமையாகக் காயமடைந்தார்.

மவுண்ட் ஃபாய்ட்டொ (Mount Faito) பகுதியில் விபத்து நேர்ந்தது.

மலையின் உச்சியை நெருங்கியபோது கம்பி ஒன்று திடீரென்று துண்டிக்கப்பட்டதால் கம்பிவண்டி விழுந்தது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

மற்றுமொரு கம்பிவண்டி பள்ளத்தின் அருகே இருந்ததால் அதிலிருந்த 16 பேரும் காப்பாற்றப்பட்டனர்.

விபத்தில் மாண்டவர்கள் வெளியூர்ப் பயணிகள் என்று தெரிவிக்கப்படுகிறது

மீட்புப் பணிகளில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள் ஈடுபட்டனர். மோசமான வானிலைக்கிடையே அவர்கள் கம்பிவண்டி விழுந்த இடத்தை அடைவதற்குச் சிரமப்பட்டதாகக் கூறப்பட்டது.

விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.

இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) விபத்தில் மாண்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.